தேர்தலில் சீட் மறுப்பு அரியானாவில் அமைச்சர், எம்எல்ஏ பாஜவில் இருந்து விலகல்

சண்டிகர்: அரியானாவில் அக்டோபர் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரடியா ரிசர்வ் தொகுதியின் பாஜ எம்எல்ஏவாக இருக்கும் லக்‌ஷ்மன் தாஸ் நாபாவிற்கு மீண்டும் போட்டியிடுவதற்கு கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இந்த தொகுதியில் சிர்சா முன்னாள் எம்பி சுனிதா தக்காலை வேட்பாளராக பாஜ அறிவித்துள்ளது. கட்சியின் இந்த நடவடிக்கை காரணமாக அதிருப்தி அடைந்த எம்எல்ஏ லக்‌ஷ்மன் தாஸ் பாஜவில் இருந்து நேற்று விலகினார். கட்சியில் இருந்து விலகிய பின்னர் முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் லக்‌ஷ்மன் தாஸ் நாபா சந்தித்தார்.

இதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் எரிசக்தி மற்றும் சிறை துறை அமைச்சர் ரஞ்சித் சவுதாலாவுக்கும் பாஜ மேலிடம் தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் வழங்கவில்லை. இதனை தொடர்ந்து ரஞ்சித் சவுதாலா சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். தனது ஆதரவாளர்களிடம் பேசிய பின்னர் அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இது குறித்து ரஞ்சித் கூறுகையில்,‘‘நான் சவுத்ரி தேவி லாலின் மகன். எனக்கென ஒரு அந்தஸ்து இருக்கிறது. நான் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளேன்” என்றார். அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்.

 

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு