டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வேண்டும்: ஒபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றாலும் பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் தேங்கியுள்ள நீர் அகற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், பொது இடங்களில் சுகாதாரப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும், சாலைகளில் தேங்கும் தண்ணீரை அவ்வப்போது அகற்றவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளை ஏற்படுத்தவும் கேட்டுக் கொள்கிறேன்.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்