திருத்தணியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி: நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

திருத்தணி: திருத்தணியில் டெங்கு விழிப்புணர்வு குறித்த பேரணியை நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணியை நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் அருள் முன்னிலை வகித்தார், நகர மன்ற துணைத் தலைவர் சாமி ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

நகர மன்ற நகராட்சி பொறியாளர் விஜயராஜ காமராஜ், கவுன்சிலர்கள் தீபாரஞ்சனி வினோத்குமார், அப்துல்லா, பிரசாத், ஷாம் சுந்தர், அசோக் குமார், செண்பகவல்லி ஆறுமுகம், குமுதா கணேசன், மகேஸ்வரி கமலக்கண்ணன், பார்வதி, நஜிமா முஸ்தபா, ரேவதி சுரேஷ்,, வெங்கடேசன். பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி மாபோசி சாலை வழியாக ஊர்வலமாக சென்று, பொது மக்களுக்கு மற்றும் கடைகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய பசுமை படை மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின், முடிவில் நகராட்சி பொது சுகாதார உதவியாளர் காமேஸ்வரன் நன்றி கூறினார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா