டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்: பொது சுகாதாரத்துறை

சென்னை: டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்முறை நோட்டீஸ் வழங்கப்படும்; அதனை ஓரிரு நாட்களில் சரி செய்யவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக முன்னாள் எம்.பி. மரணம்

குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு