தமிழகத்தில் நடப்பாண்டு இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டு இதுவரை 11,538 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு டெங்கு பாதித்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டியில்: கடந்த ஆண்டை பொருத்தவரையில் உலகம் முழுவதும் 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. எனவே 2012-ல் 66 இறப்புகளும், 2017-ல் 65 இறப்புகள் என்கின்ற நிலையில் ஒரு அச்சம் ஏற்பட்டதோ, அதே மாதிரியான அச்சம் 2023-லும் ஏற்படும் என்கின்ற நிலை இருந்தது. முதல்வரின் வழிகாட்டுதலின் படி வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக ஆலோசனை கூட்டம் நடத்தி, அலுவலர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து நடத்திய நிகழ்வுகள் காரணமாக இறப்புகளும் குறைந்துள்ளது, டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 4 பேர் இறந்துள்ளனர். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைகளுக்கு வராமல் வீடுகளில் சிகிச்சை பெற்று நோய் பாதிப்பு கூடுதலான பிறகு மருத்துவமனைகளுக்கு வருவதால் இறப்புகள் ஏற்படுகிறது. தொடர்ந்து ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு காரணமாக இறப்புகள் குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பு எண்ணிக்கைகளை குறைத்துக் காட்டக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு