கள்ளக்குறிச்சி விவகாரம் கண்டித்து வரும் 25ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்: பிரேமலதா அறிவிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். இ்த சம்பவத்தை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக வரும் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

இதில் மாவட்ட கழக செயலாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு