தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி..!!

சென்னை: தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், டி.ராஜேந்தர், நடிகர் கவுண்டமணி, கவிஞர் வைரமுத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் உடனான நினைவுகளை திரைப்பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நடிகர், நடிகைகள் வருகை புரிந்து வருகின்றனர்.

விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். தந்தையை இழந்து விஜயகாந்தின் மகன்கள் கலங்கி நிற்கின்றனர். விஜயகாந்தின் உடலை கண்டு குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். இன்றும், நாளையும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் கண்ணீரோடு விஜயகாந்த் மீதான தங்கள் அன்பை மக்கள் வெளிப்படுத்தினர். சாலையின் இருபுறமும் மக்களின் அஞ்சலிக்கிடையில் சுமார் 4 கி.மீ. தொலைவை 3 மணி நேரமாக ஊர்வலம் கடந்தது.

ஈழத் தமிழர்கள் அஞ்சலி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவுக்கு பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, இலங்கையில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மலையாள நடிகர் மோகன்லால்: சிறந்த நடிகர், நல்ல அரசியல்வாதி, கனிவான மனிதர் விஜயகாந்த். விஜயகாந்த் மறைவால் வாடும் குடும்பத்தார், ரசிகர்கள் உள்ளிட்டோருக்கு மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் பவன் கல்யாண்: விஜயகாந்த் போராட்ட குணம் கொண்டவர் என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும் பிரச்னை வரும்போது போராடி துணைநிற்கும் விதமும் போற்றத்தக்கது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்