தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்: மருத்துவ அறிக்கை வெளியீடு

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார். விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சளி காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காகதான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியானது.

பின்னர், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தது. அதுமட்டுமின்றி மேலும் 14 நாட்களுக்கு விஜயகாந்துக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது. இதனிடையே விஜயகாந்த் பூரண குணமடைய தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து விடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை