வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்: இடஒதுக்கீடு உறுதிப்படுத்த சட்டம்


சென்னை: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தும் அரசமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நேற்று நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக மக்கள் கட்சி தலைவர் ஜான் பாண்டியன், இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், திருமுருகன் காந்தி, விடுதலைப்புலிகள் நிறுவனர் குடந்தை அரசன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பிறகு திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பட்டியலின ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது.

போட்டி தேர்வின் அடிப்படையிலும், அவர்கள் பெற்ற தரவரிசை அடிப்படையிலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே வேலை கிடைக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியின அதிகாரிகளுக்கும் இதர பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். வரும் பட்ஜெட் தாக்கல் செய்கின்ற பொழுது இந்த பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். கொண்டு வராத பட்சத்தில் விசிக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம். கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்கிறீர்கள் என்ற கேள்விக்கு வரும் 12ம் தேதி உங்களுக்கு தெரியும்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி