செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புழல்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தமிழ்நாடு கிளை சார்பில், நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஏராளமான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தமிழ்நாடு கிளை சார்பில், நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் அஹமது ரிஸ்வான் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், யுஜிசி நெட் தேர்வு முறைகேட்டினால் ஒத்திவைக்கப்பட்டதால், முதுகலை மருத்துவ மாணவர்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் நீட் தேர்வு முறைகேடு காரணமாக ஒத்திவைக்கப்பட்டதால் ஏராளமான இளங்கலை மருத்துவ மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒத்திவைக்கப்பட்ட நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளை முறையாக நடத்த, சம்பந்தப்பட்ட ஒன்றிய கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில செயலாளர்கள் ரஹமத்துல்லா, முகம்மது ஜாஃபர், அப்துல்காஃபூர் உள்பட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Related posts

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வருவதால் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுப்பு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் முத்தமிழ் முருகன் மாநாடு ஆலோசனை கூட்டம்