ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் நான் தான் என்றும், தேர்தலில் இருந்து வெளியேறும்படி தனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

முன்னாள் அதிபர் டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் அதிபர் பைடன் மோசமான செயல்பாட்டுக்கு பின் அவர் தேர்தலில் இருந்து வெளியேற வேண்டும் என்று அக்கட்சியில் கருத்துக்கள் வலுத்து வருகின்றது. இந்நிலையில் அதிபர் பைடனின் நிதி திரட்டுவதற்கான இமெயிலில், நான் ஜனநாயக கட்சியின் வேட்பாளர். யாரும் என்னை தேர்தலில் இருந்து வெளியே தள்ளவில்லை. நான் வெளியேறவில்லை. நான் இறுதி வரை இந்த போட்டியில் இருப்பேன். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம்” என்றார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு