டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்புக்கு நிவாரணம்: வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு கொடுக்க தவறியதால், விவசாயிகள் பொருளாதார நஷ்டத்தில் இருக்கிறார்கள். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், தண்ணீர் கடை, மடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை.

இதனால் குறுவை சாகுபடி பெரும் அளவில் பாதித்து, லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கருகிப் போயிருப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பதில், மறு விவசாயம் செய்யவும், சம்பா சாகுபடிக்கு உடனே தயாராகும் வகையில், சம்பா தொகுப்பு திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குருவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண தொகையை காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி