தேர்தலுக்கு பின் கோவைக்கு சுவையான மட்டன் பிரியாணி ரெடி: ஒரே போடு போட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சார்பில், கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம், கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா கலையரங்கில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது: தமிழகம், புதுவையில் 40 மக்களவை தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெறும். எதிரில் யார் இருந்தாலும், திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் வந்தால்கூட இங்கு டெபாசிட் இழந்து விடுவார். கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு, தமிழக மக்களுக்கு அல்வாவும், வடையும்தான் வழங்கியுள்ளது. இதை, நமது தொண்டர்கள் பல இடங்களில் நூதனமாக அல்வாவையும், வடையையும் காட்டி, மோடி சுட்டு தருவதுபோல் செய்து காட்டினார்கள். மக்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். தமிழகத்தில் பாஜவினரே அவர்களுக்கு மிகப்பெரிய குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பாஜவினர், வடஇந்தியாவில் செய்யும் அரசியலை இங்கு செய்ய நினைக்கிறார்கள். அது நடக்காது. அதுவே எங்களது வெற்றி. இரண்டாம் இடத்திற்கு யார் வருவது என்ற போட்டி அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே நிலவுகிறது. இந்த தேர்தல், சாதாரண தேர்தல் அல்ல. ஒரு இனத்தை அழிக்க வரும் எதிரணியை வீழ்த்துவதற்கான தேர்தல். அந்த நாளை எதிர்பார்த்து, ஒட்டுமொத்த தமிழகமே துடிக்கிறது. ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகங்களை செய்துள்ளது.

கோவையில் நமது வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பெறப்போகும் வெற்றி, சாதாரண வெற்றி அல்ல. பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில், மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுபோதும், எதிரணியினர் மண்ணை கவ்வும் போது எது உண்மை என்று நிச்சயமாக தெரியும். தேர்தலல் முடிந்தவுட நிச்சயமாக பிரியாணி போடணும்னு சொன்னேன. இப்போது நீயூஸ்ல வந்துச்சு… மட்டன் பிரியாணியாம்மே… ஆகவே சுவையான ஆட்டுக்கறி பிரியாணி ரெடியா இருக்கிறது. மகத்தான வெற்றி கோவைக்கு காத்திருக்கிறது. இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு