டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு!

டெல்லி: விமான நிலைய மேற்கூரை சரிந்து வாகனங்கள் மீது விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்த விமான நிலைய முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதன் காரணமாக மழைநீர் தேங்குவதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சூழலில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் ஒன்றில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சேதம் அடைந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அதன் உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சூழலில் டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்படும் ஸ்பைஸ் ஜெட் , இன்டிகோ விமானங்கள் மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டி கொலை: 6 பேரிடம் போலீசார் விசாரணை

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு

ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!