டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மேற்கண்ட சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தொடர்ந்த வழக்குக்கு எதிராக எம்.எல்.சி கவிதா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,\\” சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா நேற்று வழங்கிய தீர்ப்பில்,\\” சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால், கவிதாவுக்கு இந்த விவகாரத்தில் எந்தவித நிவாரணமும் வழங்க முடியாது என தெரிவித்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்