டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி

டெல்லி; டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆதமி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 216ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் மதுபான கொள்கை வழக்கினை விசாரித்து வரும் மற்றொரு அமைப்பான சி.பி.ஐ. நேற்று கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து நேற்று இரவு அவரை திகார் சிறையிலேயே வைத்து கைது செய்தது. இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிபி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!