டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தீ விபத்திற்கு மின்கசிவே காரணம் என தகவல்

டெல்லி: டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தீ விபத்திற்கு மின்கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. எமர்ஜென்சி எக்ஸிட் இல்லாததும் ஒரு காரணம் என தெரிய வந்துள்ளது.

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் (25.05.2024) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் இருந்த 12 குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் மற்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீ விபத்திற்கு மின்கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. எமர்ஜென்சி எக்ஸிட் இல்லாததும் ஒரு காரணம் என தெரிய வந்துள்ளது.விபத்து சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடயவியல் குழு மற்றும் போலீஸ் டிசிபி ஷஹ்தரா சுரேந்திர சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் உரிமையாளர் நவின் கிச்சி என்பவரை டெல்லி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைதான மருத்துவமனையின் உரிமையாளர் நவீன் கிச்சி உட்பட 2 பேருக்கு வரும் 30-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!