டெல்லியில் தசரா கொண்டாட்டம் ஜாதி, பிராந்திய வெறியை வேரறுக்க வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: சமூகத்தில் நிலவும் சாதிவெறி, பிராந்திய வெறி போன்றவற்றை வேரறுக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த தசரா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில் அவர் பேசியதாவது: தசரா பண்டிகையானது நாட்டில் உள்ள ஒவ்வொரு தீமைக்கும் எதிராக தேசபக்தியின் வெற்றியைக் குறிக்க வேண்டும். பல நூற்றாண்டுகளின் காத்திருப்புக்குப் பிறகு தற்போது அயோத்தியில் கட்டப்படும் பிரம்மாண்ட ராமர் கோயிலுக்கு சாட்சியாக இருப்பது அனைவரின் அதிர்ஷ்டம். இன்னும் சில மாதங்களில் இந்த பணி நிறைவடைவது மக்களின் பொறுமைக்கு கிடைத்த வெற்றியாகும். சமூகத்தில் நிலவும் சாதிவெறி, பிராந்திய வெறி ஆகியவற்றை மக்கள் வேரறுக்க வேண்டும். இந்தியாவின் வெற்றிகரமான சந்திராயன் பயணம், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா, மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலாக்கம் போன்ற பல நல்ல முன்னேற்றங்களுக்கு மத்தியில் இந்த விழா நடக்கிறது. இந்த நல்ல தருணத்தில் குறைந்தபட்சம் ஒரு ஏழைக் குடும்பத்தின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்த உதவுவது உள்ளிட்ட 10 உறுதிமொழிகளை மக்கள் ஏற்க வேண்டும். அனைவரும் வளரும் போது நாடு வளர்ந்த நாடாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!