டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமீன் மீதான இடைக்கால தடை தொடரும்: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: விசாரணை நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமீன் மீதான இடைக்கால தடை தொடரும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழமை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்த ஜாமீனுக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது. அதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து தீர்ப்பு கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதன் மூலமாக டெல்லி முதல்வரின் சிறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கீழமை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் வைத்த வாதங்கள் மற்றும் அவர்கள் சமர்ப்பித்த பதிலறிக்கையில் கூறப்பட்டவை கீழமை நீதிமன்றத்தில் சீராக ஆராயாமல் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்கு ஏதுவாக ஜாமீன் ரத்து செய்யப்படுவதாக டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

Related posts

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் திரைப்படத் தயாரிப்பு பயிற்சி பட்டறை

திருமணத்துக்காக வந்து தங்கியபோது பெரியம்மா வீட்டில் 28 சவரன் அபேஸ்: இளம்பெண் மீது புகார்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் இன்று ஆய்வு