டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு..!!

டெல்லி: டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 53 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். கர்நாடகா இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டி.எம்.சி. நீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு செய்தது.

Related posts

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியர் கைது..!!