டெல்லியில் வரும் 27ம் தேதி பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு?

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றதும், இதுவரை இருந்துவந்த மத்திய திட்டக்குழு என்னும் அமைப்பு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக “நிதி ஆயோக்” அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார். இதையொட்டி வருகிற 27ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக்கின் ஒன்பதாவது நிர்வாக குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். பிரதமர் மோடி, 3வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் இதுவாகும். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் நிலுவைத் தொகை, நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்: பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

செப்.28-ல் பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!!

தவறான திசையில் அதிவேகமாக வந்த BMW கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி