டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்: அமைச்சர் அதிஷி எச்சரிக்கை

டெல்லி: டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தண்ணீர் தொட்டிகளில் அதிகளவு நீரை சேமித்து வைத்தாலும், வாகனங்களை கழுவினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நிலவும் கடும் வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வசிக்கும் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நீர்வளத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்