டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம்..!!

டெல்லி: டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வக்பு மசோதா தொடர்பாக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. வக்பு மசோதா தொடர்பாக பாஜக எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு கருத்து கேட்டது.

வக்பு மசோதா கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

கூட்டத்தில் திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பாஜக எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய் ஆட்சேபம் தெரிவித்தார். அபிஜித் கங்கோபாத்யாய் மற்றும் கல்யாண் பானர்ஜி இடையே வாக்குவாதம் முற்றியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணாடி டம்ளரை உடைத்த திரிணாமுல் எம்.பி

கோபத்தில் கல்யாண் பானர்ஜி அருகிலிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேஜையில் அடித்ததால் உடைந்த கண்ணாடி டம்ளரின் துண்டு, கல்யாண் பானர்ஜியின் கையை கிழித்தது. கண்ணாடி துண்டு கையை கிழித்ததை அடுத்து கல்யாண் பானர்ஜிக்கு அருகிலிருந்த எம்.பி.க்கள் முதலுதவி செய்தனர்.

 

Related posts

கோடம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா ஆய்வு

டாணா புயல் எச்சரிக்கை காரணமாக 28 ரயில் சேவைகளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து