டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டெல்லி: ஜிஎஸ்டி அதிகாரி இந்தியாவில் ஜிஎஸ்டி விதிகளை செயல்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகும். ஜிஎஸ்டியில் தேவையான முடிவுகள் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதை அவர்கள் தங்கள் கடமையாகச் செய்கிறார்கள். ஜிஎஸ்டிக்கு உட்பட்ட வரி விகிதத்தைக் கண்டறிய ஜிஎஸ்டி அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.

கட்டமைப்பு, வரி விலக்கு விதிகள், ஜிஎஸ்டி படிவங்களை வழங்குவதற்கான கடைசி தேதி, வரி சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் கடைசி தேதி மற்றும் இந்தியாவில் உள்ள சில மாநிலங்களுக்கான குறிப்பிட்ட சலுகைகள். ஜிஎஸ்டியின் நிலையான விகிதமானது இந்தியா முழுவதும் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளுக்குப் பொருந்தும் என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஜிஎஸ்டி அதிகாரிக்கு உள்ளது.

டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜி.எஸ்.சி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிமென்ட், ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜி.எஸ்.டியை அதிகரிப்பது உள்ளிட்டவை பற்றி முடிவு எடுக்க வாய்ப்புயுள்ளது. பன்னோக்கு பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மறு ஆய்வு செய்வது குறித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்புயுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஆன்லைன் கேமிங் மற்றும் வர்த்தகம் குறித்தும், அதற்கான வரி விதிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளில் ஏதாவது மாற்றம் தேவை என்பது குறித்து கருத்துகள் பகிரப்படும். இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வரி விதிப்பு விகிதம் பல முறை மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு வரி விதிக்கப்படும் என்றும், தற்போது வரி விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தில் மாற்றம் தேவையா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

Related posts

கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார்; நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும் வரை சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்