டெல்லியில்சரிதா விஹார் காவல்நிலையம் அருகே ஷான்-இ- பஞ்சாப் விரைவு ரயிலில் தீ விபத்து

டெல்லி: டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே ஷான்-இ- பஞ்சாப் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 பெட்டிகளில் பரவிய தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர் சேதம், காயம் குறித்த தகவல்கள் ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தீ அணைக்கப்பட்ட பிறகே தீ விபத்திற்கான காரணங்கள் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். டெல்லியில் அதிக வெயிலின் காரணமாக அதிக தீ விபத்துகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் ஒரே நாளில் சுமார் 200 அலைப்புகள் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கலுக்கு மத்தியில் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை மறுநாள் அமல் : பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகள்