டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சந்திரசேகரராவின் மகள் கவிதாவின் காவல் நீட்டிப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. அவரை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றக் காவலில் டெல்லி திஹார் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் குற்றவாளிகளான இளவரசன், தாமோதர் மற்றும் அரவிந்த் சிங் ஆகிய 3 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்படாமல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அவரது காவலை ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Related posts

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி

அம்பாலாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து