டெல்லி முதல்வரின் பங்களாவை அலங்கரிக்க ₹45 கோடி செலவு: ஆவணம் வெளியிட்ட பாஜக

புதுடெல்லி: டெல்லி முதல்வரின் பங்களாவை அலங்கரிக்க ரூ. 45 கோடி செலவிடப்பட்டுள்ளதற்கான ஆவணங்களை பாஜக வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு நடந்து வருகிறது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அலங்கரிக்கவும், மறுசீரமைக்கவும் டெல்லி பொதுப்பணித்துறை சார்பில் 45 கோடி ரூபாய் செலவிட்டதாகக் கூறப்படும் ஆவணங்களை பாஜக வெளியிட்டுள்ளது.

அந்த ஆவணங்களில், கடந்த 2020 செப்டம்பர் முதல் 2022 ஜூன் மாதம் வரை மேற்கொண்ட தொகை செலவிடப்பட்டதாகவும், குறிப்பாக கொரோனா இந்தத் தொகை செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எளிமையான முதல்வர் எனக் கூறிக் கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பங்களாவில் ஆடம்பரமாக செலவு செய்து வாழ்ந்து வருவதாகவும், தார்மீக அடிப்படையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா ெதரிவித்துள்ளார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்