சென்னையில் 106 டிகிரி வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. 31ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் இயல்பை ஒட்டியும் வெப்பநிலை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தென் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 1ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்