பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அமைச்சரவை குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு

புதுடெல்லி: நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் ஆகிய துறைகளில் பல்வேறு அமைச்சரவைக் குழுக்களை ஒன்றிய அரசு அமைத்தது.

இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கனரகத் தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு, பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஜுவால் ஓரம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஜல் சக்தி அமைச்சர் சி ஆர் பாட்டீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் சட்டத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related posts

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்