அவதூறு பரப்ப ஆதரவாக களமிறங்கும் பாஜவினர் கருத்து சுதந்திரம் பற்றி பேசலாமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: அவதூறு பரப்புவதற்கு ஆதரவாக களமிறங்கும் பாஜவினர் கருத்து சுதந்திரம் பற்றி பேசலாமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பாஜ மாநில செயலாளர் அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கருத்துச் சுதந்திரம் குறித்து ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கவலைப்படுகிறார். ஆனால் உலக அளவில் பத்திரிகை சுதந்திரம் குறித்து ஆய்வு செய்த எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு, ஊடகச் சுதந்திரம் குறித்து 180 நாடுகளில் ஆய்வு செய்து இதில் 150வது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா?.

சமூக ஊடங்களை அவதூறுகளையும், பொய் புனைச்சுருட்டுகளையும் பரப்பும் இடமாகவே பாஜவினர் பயன்படுத்துகின்றனர். ஒரு புகாரின் பேரில் தமிழக காவல்துறை எடுத்த சரியான சட்டப்பூர்வ கைது நடவடிக்கைக்காக இவ்வளவு தூரம் பாஜ தலைவர்கள் துடிக்கிறார்கள். அதே சமயம் ஒன்றிய பாஜ அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டு தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்