அவதூறு வழக்கில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம்..!!

சென்னை: அவதூறு வழக்கில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து கலாச்சாரத்துக்கு எதிராக கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதுபோல அண்ணாமலை கருத்து உள்ளது. சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் அண்ணாமலைக்கு இருந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளது. ஐ.பி.எஸ். முன்னாள் அதிகாரியான அண்ணாமலை, சட்டத்தை பற்றி தெரிந்திருப்பார். அண்ணாமலை பேச்சு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளது. அண்ணாமலை பேட்டி அளித்து 400 நாள் கடந்த பிறகு வன்முறை நடக்கவில்லை என்ற அண்ணாமலை வாதத்தை ஏற்க முடியாது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை