அவதூறாக செய்தி: விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு

டெல்லி: தமது நிறுவனம் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், அவதூறு செய்தி வெளியிட்டதற்கு இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் மனுவுக்கு விக்கிபீடியா பதில் அளிக்குமாறு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போலி செய்தி இணையதளங்களில் இருந்து ஏராளமான தகவல்களை ஏஎன்ஐ வழங்குவதாகவும் விக்கிபீடியா கூறியுள்ளது. நிகழ்வுகள் குறித்து தவறாக செய்திகளை ஏஎன்ஐ வெளியிட்டதாகவும் விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தனிப்பட்ட கருத்துகளை கூறுவதற்கு விக்கிபீடியாவுக்கு உரிமை உள்ளது. நீதிமன்றத்தில் தனது நடவடிக்கை குறித்து விக்கிபீடியா விளக்கம் அளிக்கும் எனவும் நீதிபதி நவீன் சாவ்லா கருத்து தெரிவித்துள்ளார்.

 

Related posts

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போதுமான வசதிகளை செய்து தந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்