தீபக் ராஜா கூட்டாளி போலீசில் திடீர் சரண்

நெல்லை: நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்த தீபக் ராஜா(30) கடந்த மே 20ம் தேதி நெல்லை மாவட்ட நீதிமன்றம் அருகே ஓட்டல் முன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து இதுவரை 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கொலை செய்யப்பட்ட பின், போலீசார் அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய தீபக் ராஜாவின் கூட்டாளியான ஊசிக்காட்டான் என்ற ஊசிப்பாண்டியன்(38) என்பவரை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அவரது சொந்த ஊரான வாகைக்குளத்திற்கு அருகே உள்ள புளியங்குளத்திலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஊசிக்காட்டான் நேற்று மூன்றடைப்பு காவல் நிலையத்தில் திடீரென சரணடைந்தார்.

Related posts

நத்தம் அருகே காதலியை ஏர் கன்னால் சுட்ட காதலன்

பாரா ஒலிம்பிக்கில் இன்றிரவு நிறைவு விழா; 29 பதக்கத்துடன் இந்தியா16வது இடம்; ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நவ்தீப் சிங்

வெளிநாடு சென்று இந்தியா திரும்விய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை பாதுப்புக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு