4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு: இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் நிகழ்வு நாளை இரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை 16 தொடரும். கன்னியாகுமரியில் 2.5 மீ., ராமநாதபுரத்தில் 2.8 மீ., நெல்லை, தூத்துக்குடியில் 2.6 மீ. உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும். குமரியில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையும், ராமநாதபுரத்தில் ரோஜ்மா நகர் முதல் தீர்த்தாண்டதானம் வரையும் கடல் அதிக உயரம் எழும்பும்.

தூத்துக்குடியில் பெரியதலை முதல் வேம்பார் வரையும் நெல்லையில் குட்டப்புளி முதல் கூடுதலை வரையும் அலை அதிக உயரம் எழும்ப வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் லேசான அலை எழுச்சி இருக்கும். சென்னையில் பாலவாக்கம் முதல் லட்சுமிபுரம் ஓடைக்குப்பம் வரை லேசான அலை எழுச்சி இருக்கும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலம்பரைக்குப்பம் முதல் சின்ன நீலாங்கரை வரை லேசான அலை எழுச்சி இருக்கும்.

திருவள்ளூரில் பழவேற்காடு முதல் ராயபுரம் வரை லேசான அலை எழுச்சி இருக்கும். சென்னை, காஞ்சிபுரத்தில் நாளை மதியம் ஒரு மணி வரையும், திருவள்ளூரில் நாளை இரவு 7 மணி வரையும் கடல் எழுச்சி இருக்கும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்