ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த நிலையில் தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த நிலையில், தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் (செப்.8) காலை, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா- மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று பிற்பகலில் ஒடிசா ( பூரி கடற்கரை) மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம் (தீகா) கடற்கரை இடையே கரையை கடந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று( செப்.10 ) முதல் 15ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மதுரவாயலில் ஷவர்மா சாப்பிட்டதால் பள்ளி ஆசிரியை உயிரிழப்பா..? போலீசார் விசாரணை

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார்; உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!