போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீரராகவர் கோயில் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை: நகர்மன்ற கூட்டத்தில் முடிவு

திருவள்ளூர்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீரராகவர் கோயில் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரவிச்சந்திரன், ஆணையர் திருநாவுக்கரசு, பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், மேலாளர் சந்திரிகா, நகரமைப்பு அலுவலர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், சுமித்ரா வெங்கடேசன், நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், பிரபாகரன், பிரபு, சாந்தி கோபி, அயூப் அலி, பாபு, ஜான், ராஜ்குமார், பத்மாவதி ஸ்ரீதர்,

அருணா ஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், சீனிவாசன், ஹேமலதா நரேஷ், விஜயகுமார், கமலி மணிகண்டன், ஆனந்தி சந்திரசேகர், செந்தில்குமார், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, வீரராகவர் கோயிலில் ஒவ்வொரு அமாவசை தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் வாகனங்களை சாலையில் இருபுறமும் நிறுத்துவதாலும், ஆக்கிரமித்து கடைகள் அமைந்துள்ளதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ளது. எனவே, விண்ணப்பித்த நபர்களுக்கு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்து பேசிய நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், உறுப்பினர்கள் தெரிவித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related posts

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு!

அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு