டிசம்பரில் நாடாளுமன்ற தேர்தல் வரலாம்; பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார முறையில் ஆட்சி செய்யும்: முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை

கொல்கத்தா: பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார முறையில் ஆட்சி செய்யும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பாஜகவினர் பிரசாரத்துக்காக அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்துவிட்டனர். இதனால் வேறு எந்த கட்சியும் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியாது என்றார்.

மேலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையை ஒன்றிய பாஜக அரசு மாற்ற முயற்சிப்பது சந்தேகம் அளிக்கிறது. கமிட்டி அமைக்குமாறு கேட்ட தலைமை நீதிபதியையே குழுவில் இருந்து நீக்கிவிட்டார்கள். தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க கமிட்டி அமைக்குமாறு தலைமை நீதிபதி ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் தலைமை நீதிபதிக்கு பதில் ஒன்றிய அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார முறையில் ஆட்சி செய்யும் என மம்தா பானர்ஜி கூறினார்.

பா.ஜனதாவினர் ஏற்கனவே நமது நாட்டை சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் தேசமாக மாற்றிவிட்டனர். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது நம் நாட்டை வெறுப்பு நாடாக மாற்றிவிடும் எனவும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி பேசினார். மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்து குறித்து மம்தா கூறியதாவது; பெரும்பாலான போலீஸ்காரர்கள் அதிகபட்ச நேர்மையுடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால் சிலர் சமூக விரோதிகளுக்கு உதவி வருகின்றனர். மாநிலத்தில் ஊழல் எதிர்ப்பு பிரிவு இருப்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு