கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வைக்கம் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (50). அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி சினிமோள் (45).

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வந்த தற்காலிக ஊழியர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் நடேசனுக்கும் வேலை பறிபோனது.

வேலை போன பின்னர் நடேசன் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. பலரிடம் இருந்து வாங்கிய கடனை அவரால் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று நடேசனும், சினிமோளும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் வைக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கடன் தொல்லை காரணமாக 2 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து வைக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்