நலிவுற்ற மக்கள் பயன்பெறும் வகையில் 1 லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம்: பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: வீட்டு வசதி துறை மானிய கோரிக்கையின் போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்பு:

 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

 வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள ஏதுவாக இந்த நிதி ஆண்டில் மேம்பாடு மற்றும் புனரமைப்பு பணிகள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

 நில உரிமை உள்ள நலிவுற்ற மக்கள் பயன்பெறும் வகையில் தாமாக வீடுகட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் 1 லட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும்.

 தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள் தாமாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் மாநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் 1 லட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும்.

 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக நாவலூர் திட்டப்பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்படும்.

 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நாவலூர் திட்டப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், இளைஞர் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக நாவலூர் திட்டப்பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்படும்.

 பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தொழிற் பயிற்சி கூடம் அமைக்கப்படும்.

 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்க ரூ.1 கோடி மதிப்பீட்டில் தொழிற் பயிற்சி கூடம் அமைக்கப்படும்.

 வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மகளிர் மேம்பாட்டிற்காக 2000 மகளிருக்கு சிறப்பு சுயதொழில் பயிற்சி வழங்கப்படும்.

 ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் நல்லகவுண்டன்பாளையம் திட்டப்பகுதியில் கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். நல்லகவுண்டன்பாளையம் திட்டப்பகுதியில் 3,264 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

 விளையாட்டில் ஆர்வம் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் விளையாட்டில் ஆர்வம் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கைப்பந்து, கபடி, கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5000 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு