பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ேவண்டும்: திரிணாமுல் மூத்த தலைவர் பேட்டி

கொல்கத்தா: பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ேவண்டும் என்று திரிணாமுல் மூத்த தலைவர் கூறினார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ் கூறுகையில், ‘சிபிஐ அதிகாரிகள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். டாக்டர்கள் போராட்டம் பற்றி நாங்கள் எதுவும் விமர்சிக்க போவதில்லை’ என்றார். மேற்கண்ட வழக்கில் சஞ்சய் ராய் என்ற ஒரு நபர் மட்டுமே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர், குற்றம் நடந்த விபரங்களை போலீசாரிடம் ஒப்பு கொண்டுள்ளார். எனினும், பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை வழக்கில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தொடர்பு உள்ளது என பெண் டாக்டரின் தந்தை தொடர்ந்து கூறி வருகிறார். இவ்வழக்கில் சஞ்சய் ராய், மருத்துவக்கல்லூரி தலைவர் உட்பட 4 டாக்டர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

 

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி