பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு


சிவகாசி: சிவகாசி அருகே, பட்டாசு ஆலை விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் தங்கையா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 60க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இங்கு கடந்த 9ம் தேதி பட்டாசு தயாரிப்பதற்காக ஒரு அறையில் மணி மருந்து கலந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில், அறை முழுவதும் தீ பரவியது. இதில், அறையில் வேலை பார்த்த மாரியப்பான் (45), முத்துவேல் (45) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகியோர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா நேற்று மாலை இறந்தார். சங்கரவேல் இன்று காலை இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

நல்ல விஷயத்திற்காக அதிமுகவை விசிக அழைத்துள்ளது: அந்த அழைப்பை ஏற்று அதிமுக சென்றால் நல்லதுதான்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நிலவில் அணு மின் நிலையம் இந்தியா-சீனா இணைந்து செயல்பட விருப்பம்!!

ஆம்ஆத்மி எம்பி தொடர்ந்த வழக்கு; கெஜ்ரிவாலை சந்திக்க சட்ட விதியின்படியே அனுமதி மறுப்பு; உச்ச நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் பதில்