ஜூலையில் ‘டெட்’ தேர்வு.. 2024ம் ஆண்டு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்..!!

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 4000 பேராசிரியர்கள், 1766 இடைநிலை ஆசிரியர்கள் உட்பட 6281 காலி பணியிடங்களுக்கு நடப்பாண்டில் போட்டித் தேர்வுகள் நடைபெறும். அதன்படி, ஆசிரியர் பணியிடங்களுக்கான TET தகுதித்தேர்வு ஜூலையில் நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பாணை ஏப்ரலில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1,766 இடங்களுக்கான 2ம் நிலை ஆசிரியர் பணிக்கான (SGT) தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 இடங்களுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகி ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுநிலை ஆசிரியர்கள் பணிக்கு 200 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மே மாதம் இதன் அறிவிப்பு வெளியாகி, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அட்டவணையின் முழு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்