மருமகள் நடத்தை மீது சந்தேகம் பேத்தியை கொன்ற பாட்டி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த கோட்டைக்காட்டை சேர்ந்தவர் ராஜா. வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா(21). இவர்களது மகன் மோனிஷ்(2), மகள் கிருத்திகா(1). ராஜாவின் தாய் விருத்தாம்பாள்(65). இவர்களது வீட்டில் கறவை மாடுகள் வளர்க்கப்படுகிறது. இவற்றில் இருந்து சந்தியா பால் கறந்து, வீடுவீடாக சென்று பால் விற்பனை செய்வது வழக்கம். கடந்த 17ம் தேதி மாலை மாமியார் விருத்தாம்பாள்(65) வீட்டில் இருந்தபோது 2 குழந்தைகளையும் பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு பால் ஊற்றுவதற்காக சந்தியா சென்றார். சந்தியா பால் ஊற்றி விட்டு வீட்டுக்கு வந்தபோது, கிருத்திகாவின் வாயில் மண்ணுடன் சுய நினைவு இல்லாமல் கிடந்தாள். இதையடுத்து கிருத்திகாவை சிகிச்சைக்காக பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சந்தியா தூக்கி சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, கிருத்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் தளவாய் போலீசார் சென்று குழந்தையின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சந்தேகத்தின்பேரில், பாட்டி விருத்தாம்பாளிடம் விசாரித்தனர். அப்போது பேத்தி வாயில் மண்ணை திணித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேலும் விசாரித்தபோது, கிருத்திகா எனது மகனுக்கு பிறக்கவில்லை என்று சந்தியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தேன். 17ம் ேததி எனது பேரன் மோனிஷ் மீது கிருத்திகா மண்ணை அள்ளிப்போட்டு விளையாடி கொண்டிருந்தாள். இதில் ஆத்திரமடைந்து நான் கிருத்திகா வாயில் மண்ணை திணித்தேன். இதில் மயங்கி விழுந்து கிருத்திகா இறந்து விட்டாள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து விருத்தாம்பாளை கைது செய்து செந்துறை ேகார்ட்டில் ேநற்று ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் ேபாலீசார் அடைத்தனர்.

Related posts

குடிநீர் பாட்டிலுக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஓட்டல்: ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மாவட்ட வாரியாக அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு