மகள்களுக்கு பாலியல் தொல்லை கைதான தந்தை தற்கொலை

சிவகிரி: சிவகிரி அருகே மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதாகி ஜாமீனில் வந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான கூலித் தொழிலாளி. இவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர், தினமும் மாலையில் சிவகிரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

நேற்று தொழிலாளிக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தொழிலாளி தனது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் தொழிலாளி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சொல்லிட்டாங்க…

கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்