மாமியாரை சுவரில் மோதவிட்டு தாக்கிய மருமகள்: வீட்டில் இருந்த சிசிடிவி காட்டி கொடுத்தது

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரின் சாகேத் காலனியை சேர்ந்த மருமகள், தனது வயதான மாமியாரை அடித்து துன்புறுத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மருமகள் தனது மாமியாரின் தலையை பிடித்து சுவரில் மோதவிட்டு தாக்கினார். காயமடைந்த மாமியார், சத்தம் போட்டு அழத் தொடங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பிஜ்னூர் போலீசார் மருமகளின் வீட்டை தேடிப்பிடித்து, மாமியார் புகாரின் பேரில் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். அதில் ஒருவர், ‘மாமியாரை கொடுமை படுத்திய மருமகளுக்கு, தனது வீட்டில் சிசிடிவி கேமரா இருப்பது தெரியாதா?’ என்றும், மற்றொருவர், ‘இருவரும் பெண்கள் தானே. மருமகள் என்பவர் ஒரு நாள் தானும் மாமியார் ஆகுவோம் என்பது அவருக்கு தெரியாதா? மாமியாருக்கு கொஞ்சம் மரியாதை, அவர் தங்குவதற்கான இடம், கொஞ்சம் உணவு அவ்வளவு தானே… இதுபோன்ற குடும்ப வன்முறை வீடியோக்களை பார்க்கும் போது நமது சமூகம் குப்பையாகி வருகிறது என்பதையே காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி