டேட்ஸ் ஹனி பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி ¾ கப்,
பயத்தம்பருப்பு ¼ கப்,
பால் 2 கப்,
விதை நீக்கிய பேரீச்சம் பழம் 10,
தேன் 2 டேபிள் ஸ்பூன்,
நெய் ¼ கப்,
சுக்கு பொடி 1 டீஸ்பூன்,
ஏலப்பொடி ½ டீஸ்பூன்,
முந்திரி 10,
வெல்லம் 1½ கப்.

செய்முறை:

வாணலியில் பயத்தம்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து, பாலுடன் 2 கப் நீர் விட்டு அதில் அரிசி, பருப்பை கழுவி 15 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குக்கரில் வேகவைத்து எடுத்து, நன்கு மசித்து வெல்லத்தைக் கரைய விட்டு வடிகட்டி எடுத்து பருப்பு கலவையில் விட்டு அடுப்பில் வைத்து கிளறவும். சுக்குப்பொடி, ஏலப் பொடி, பேரீச்சம் பழத் துண்டுகளை கலக்கவும். கெட்டியாக இறுகி வந்ததும் இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, நெய், தேன் விட்டு பொங்கலில் கலக்கினால் சுவையான பொங்கல் தயார்.

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி