கருவளையமா கவலை வேண்டாம்!

கருவளையப் பிரச்னை இன்று மிகச் சாதாரணப் பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால் இவை உங்கள் உட்புற உடல் பலவீனமாக இருப்பதைக் காட்டும் கண்ணாடி என்பது பலரும் புரிந்துகொள்வதில்லை. பொதுவாக சிறுநீரகப் பிரச்னை, செரிமானக் கோளாறுகள், தூக்கமின்மை, கண்களுக்கு ஓய்வில்லாமை என பல காரணங்களால் கருவளையம் உண்டாகும். இவற்றிற்கு ஆரம்பத்திலேயே வாழ்க்கை முறையிலும், உணவுகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாலே விரைவில் சரி செய்துகொள்ளலாம்.

ஆரஞ்சு: ஆரஞ்சுச் சாறு மூலமும் கருவளையங்களை நீக்கலாம். ஆரஞ்சுச் சாறு மற்றும் சில துளிகள் கிளிசரின் கலவையை பூசி வந்தால் கருவளையங்கள் படிப்படியாக மறைந்துவிடும். இது
சருமத்துக்கு பொலிவையும் தரும்.

தேநீர்ப்பை: 1 டீ பேக் உதவியுடன் கண்களுக்கு கீழே உள்ள கருவளைங்களை அகற்றலாம். தேநீர்ப்பையை தண்ணீரில் ஊறவைத்து, குளிர்சாதனப் பெட்டியில் சிறிதுநேரம் குளிரவைக்கவும். அதன் பிறகு உங்கள் கண்களை மூடிய நிலையில் அந்த தேநீர்ப்பையை வைத்தால் நல்லது. நல்ல பலனை பெற தொடர்ந்து ஒரு வாரத்துக்கு இவ்வாறு செய்ய வேண்டும்.

வெள்ளரி: வெள்ளரியை வட்டமாக வெட்டி கண்களில் வைத்துக்கொண்டால் கண் கருவளையம் நீங்கும். இதனுடன் கஸ்தூரி மஞ்சள், தேன் கலந்து அரைத்து பூசவும் நல்ல பலன் கிடைக்கும்.

தண்ணீர்: கணினியில் அதிகம் வேலை செய்வோர் அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரில் கழுவி சிறிது நேரம் கருவிழிகளை உருட்டி பயிற்சி செய்து கொண்டே இருந்தால் கருவளையம் வரும் முன்பே காக்கலாம். வேலை நேரத்தில் அதிகம் தண்ணீர் குடிப்பதும் உடலுக்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது.

பழங்கள்: பழச்சாறு, இளநீர், மோர் இவை உடலை குளிர்விக்கும். இவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள உடல் சூடு மட்டுமின்றி கண்களில் உஷ்ணமும் குறையும். இதனால் அரிப்பு, எரிச்சல், கண்களில் கட்டி இவைகளும் வராமல் பாதுகாக்கலாம். பொதுவாக இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் இருப்பது, மன அழுத்தத்தை தவிர்ப்பது, பிரச்னைகளை தலையில் போட்டுக்கொண்டு கவலை கொள்ளாமல் இருப்பது போன்றவை கருவளையம் ஏற்படாமல் தடுக்கும். வேலை எவ்வளவுதான் முக்கியம் என்றாலும் அதைவிட நமது உடல் நலம் முக்கியம் என்று உணர்ந்து செயல்படுவது நலம்.
– அ.ப. ஜெயபால்

Related posts

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

பராமரிப்பு பணி; சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நாளை ரத்து!

டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு: அவருடன் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்