திருத்தங்கல்லில் பள்ளி அருகே ஆபத்தான திறந்தவெளி கிணறு தடுப்புவேலி அமைக்க கோரிக்கை

சிவகாசி: திருத்தங்கல் அரசு பள்ளி அருகே அபாய நிலையில் உள்ள கிணற்றை மூட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் சத்யா நகரில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளி அருகில் பல ஆண்டுகளாக பயன்படுத்தாத திறந்தவெளி கிணறு உள்ளது. இந்த கிணறு திறந்து கிடப்பதால் சிறுவா்கள் மற்றும் ஆடு, மாடுகள் தவறிவிழுந்து உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது. இதனால் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனா்.

இப்பகுதியில் விளையாட செல்லும் குழந்தைகள் கிணற்றுக்குள் தவறி விழ வாய்ப்புள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கிணற்றில் மாமிச கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கிணற்றை சுத்தப்படுத்தி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும், மழைநீா் சேகரிக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் அல்லது கிணற்றை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும் என பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி