காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தா? 11 இமாச்சல் எம்எல்ஏக்கள் உத்தரகாண்ட்டுக்கு மாற்றம்

ரிஷிகேஷ்: இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் ஆளும் காங்கிரசின் 6 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் கட்சி மாறி பாஜ வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதனால், உடனடியாக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், கட்சி மாறி வாக்களித்த 6 எம்எல்ஏக்களை காங்கிரஸ் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களும் தங்களுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகளுடன் பாஜவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என 11 பேரும் உத்தரகாண்ட் சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது