சேதமான சாலையை எம்எல்ஏ ஆய்வு

பொன்னேரி: பழவேற்காடு பகுதிகளில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை துரை.சந்திரசேகர்.எம்எல்ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இருந்து தோனிரேவு, ஜமீலாபாத், செஞ்சியம்மன் நகர் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலை கடந்த வடகிழக்கு பருவமழையின் போதும், மிக்ஜாம் புயலின் போதும் வெகுவாக பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய வகை மேம்பாலத்தில் துளை ஏற்பட்டு பெரிய விரிசலாகி சாலையின் பாதி தூரம்வரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதேபோன்று, 2 இடங்களில் மணல் அரிப்பு ஏற்பட்டு சாலை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து, தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அப்பகுதிக்கு நேற்று நேரில் சென்று பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், பழவேற்காடு பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வருகின்ற வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் தொடரும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், தோனிரேவு கன்னிமுத்து, அத்திப்பட்டு புருஷோத்தமன், கோட்டைக்குப்பம் ஜெயராமன், பழவை ஜெயசீலன், ராஜிவ்காந்தி, சுகு மற்றும் ஜமீலாபாத் கிராம நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது